< Back
தேசிய செய்திகள்
தெலங்கானா: சிமெண்ட் தொழிற்சாலையில் திடீர் விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
தேசிய செய்திகள்

தெலங்கானா: சிமெண்ட் தொழிற்சாலையில் திடீர் விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
25 July 2023 5:11 PM IST

கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது.

தெலுங்கானா,

தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை. இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது.

கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

பலியானவர்கள் உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மை ஹோம் நிர்வாகம், எந்த கருத்தும் கூறவில்லை. வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்