< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெலுங்கானா: போலீஸ் நடத்திய என்கவுண்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
|5 Sept 2024 11:44 AM IST
இறந்தவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவரும் அடங்குவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பள்ளி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனப்பகுதியில் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
பதிலுக்கு, போலீசாரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவரும் அடங்குவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.