< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்
|3 Dec 2022 1:11 PM IST
தெலுங்கானா மாநிலத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை பெற்றோர்கள் தாக்கினர்.
நிஜாமாபாத்
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடைபெற்றது. தெலுங்கானா ஆசிரியை பெற்றோர்கள் கூட்டத்தில் வைத்து ஆசிரியரை பெற்றோர்கள் தாக்கினர். ஆத்திரமடைந்த பெற்றோர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் மீது செருப்புகளை வீசினர்.
ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து.ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர் மீது இன்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.