< Back
தேசிய செய்திகள்
தெலங்கானா கவர்னர் தமிழிசையின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கம் முடக்கம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

தெலங்கானா கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கம் முடக்கம்

தினத்தந்தி
|
17 Jan 2024 7:53 AM IST

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானா கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனின் 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை மீட்கும் முயற்சியில் கவர்னர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள் யார், எதற்காக முடக்கினார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்