< Back
தேசிய செய்திகள்
பாம்பு கடித்து தந்தை, மகன் உயிரிழப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பாம்பு கடித்து தந்தை, மகன் உயிரிழப்பு

தினத்தந்தி
|
23 July 2023 6:09 AM IST

தெலுங்கானாவில் பாம்பு கடித்து தந்தை, மகன் உயிரிழந்தனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி அருகே ராஜம்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி (வயது 40). இரவு தனது மகன் வினோத்துடன் (12) வீட்டில் படுத்திருந்தார். அப்போது மகனை பாம்பு ஒன்று கடித்துவிட்டு செல்வதை ரவி பார்த்தார். பாம்பு கடியில் இருந்து மகனை காப்பாற்ற முயன்ற ரவியையும் பாம்பு கடித்துவிட்டது.

தங்களை கடித்தது விஷம் இல்லாத பாம்பு என்ற நம்பிக்கையில் தந்தையும், மகனும் பச்சிலைகளை கட்டிக்கொண்டு படுத்துவிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி வினோத் உயிரிழந்தான். உடல்நிலை மோசம் அடைந்து ரவியும் இறந்தார்.

மேலும் செய்திகள்