< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்..!
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்..!

தினத்தந்தி
|
17 Nov 2023 5:06 PM IST

தெலுங்கானா மாநிலத்திற்கு சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சியை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.

அமராவதி,

119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு வருகிற 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதி உதவி

* ரூ.500க்கு சமையல் எரிவாயு

* அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

* ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி

* குத்தகை விவசாயிகளுக்கும் இது போல் வழங்கப்படும்.

* விவசாய கூலிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படும்

* நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும்.

* கிரக ஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்

* வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட இலவசமாக நிலத்துடன், வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி

* தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு 750 சதுர அடி நிலம் வழங்கப்படும்

* மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், பீடி சுற்றும் தொழில் செய்பவர்கள், தனியாக வாழும் பெண்கள், நெசவாளர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு 24 மணி நேரம் இலவச மின்சாரம்

*விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி

*வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்

* ரூ.10 லட்சம் மதிப்புள்ள சுகாதார காப்பீடு வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மல்லிகார்ஜுன கார்கே,

தெலுங்கானா மாநிலத்திற்கு சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சியை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது.

கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த உடனே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைப் போல, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் உடனே நிறைவேற்றப்படும் என்றார்.

மேலும் செய்திகள்