< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெலுங்கானா: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு
|7 Jan 2024 8:59 PM IST
விபத்து தொடர்பாக திட்ட பொறியாளர் மற்றும் கண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தேவாலய கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது அங்கு பணியில் இருந்த கட்டிட தொழிலாளர்கள் சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக திட்ட பொறியாளர் மற்றும் கண்டிராக்டரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.