< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா:  தேர்தல் பிரசாரத்தில் திடீரென மயங்கிய முதல்-மந்திரியின் மகள்
தேசிய செய்திகள்

தெலுங்கானா: தேர்தல் பிரசாரத்தில் திடீரென மயங்கிய முதல்-மந்திரியின் மகள்

தினத்தந்தி
|
18 Nov 2023 2:55 PM IST

சிறுமியை சந்தித்ததும், அவளுடன் நேரம் செலவிட்ட பின்பு, சக்தி கிடைத்தது போல் உணருகிறேன் என எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டு உள்ளார்.

கத்வால்,

தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதல்-மந்திரி கே. சந்திரசேகர ராவின் மகள் மற்றும் பாரதீய ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த எம்.எல்.சி. கவிதா தேர்தல் பிரசாரத்தில் இன்று ஈடுபட்டார்.

திறந்த நிலையிலான வாகனம் ஒன்றில் முன்னால் நின்றபடி காணப்பட்டார். அக்கட்சி பெண் தொண்டர் ஒருவர் கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருந்தபோது, உடன் நின்றிருந்த கவிதாவுக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அவர் சாய்ந்து, தரையில் அமர சென்றதும், உடனிருந்தவர்கள் அச்சமடைந்து என்னவென பார்க்க அவரை சூழ்ந்து கொண்டனர். இந்நிலையில், அக்கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில், கவிதாவுக்கு, நீரிழப்பு ஏற்பட்டு உடல் சோர்வடைந்து உள்ளது. சிறிய இடைவெளிக்கு பின்னர், பிரசாரம் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறுகிறது என தெரிவித்து உள்ளது.

இதன்பின்னர், சிறுமியுடன் பேசி கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை கவிதா வெளியிட்டார். இந்த இனிமையான சின்ன, சிறுமியை சந்தித்ததும், அவளுடன் நேரம் செலவிட்ட பின்பு, சக்தி கிடைத்தது போல் உணருகிறேன் என எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்