< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சந்திப்பு
|4 July 2024 8:05 PM IST
தெலுங்கானா மாநிலம் தொடர்பான பல பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் விவாதித்தார்.
புதுடெல்லி,
தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் துணை முதல் மந்திரியும் உடனிருந்தார். இருவரும் பிரதமர் மோடிக்கு நந்தி சிலையை பரிசாக அளித்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது.
தெலுங்கானா மாநிலம் தொடர்பான பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார். முன்னதாக இன்று காலை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.