< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா இடைத்தேர்தல்:  ஆளும் டி.ஆர்.எஸ்-பா.ஜ.க. இடையே இழுபறி
தேசிய செய்திகள்

தெலுங்கானா இடைத்தேர்தல்: ஆளும் டி.ஆர்.எஸ்-பா.ஜ.க. இடையே இழுபறி

தினத்தந்தி
|
6 Nov 2022 6:22 AM GMT

தெலுங்கானா இடைத்தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மற்றும் பா.ஜ.க. இடையே இழுபறி நீடிக்கிறது.



ஐதராபாத்,


தெலுங்கானா சட்டசபைக்கு உட்பட்ட முனோகோடே தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில் அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

இதன் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று நடந்து வருகிறது. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளராக கூசுகுந்த்லா பிரபாகர் ரெட்டி களமிறங்கி உள்ளார். பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக கோமதிரெட்டி ராஜகோபால் ரெட்டி களமிறக்கப்பட்டு உள்ளார்.

இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து இருவருக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பிரபாகர் ரெட்டி 26,443 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அவரை தொடர்ந்து, பா.ஜ.க. வேட்பாளர் ராஜகோபால் ரெட்டி 25,729 வாக்குகளுடன் 2-வது இடத்தில் பின்தொடர்ந்து வருகிறார்.

மேலும் செய்திகள்