< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா: பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. யாதய்யா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

தெலுங்கானா: பி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. யாதய்யா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

தினத்தந்தி
|
28 Jun 2024 8:56 PM IST

பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. யாதய்யா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தின் செவல்லா தொகுதி பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. யாதய்யா, இன்று அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் யாதய்யா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

ஏற்கனவே அண்மையில் ஜக்திலால் தொகுதி எம்.எல்.ஏ. ஜேஜெய் குமார், முன்னாள் சட்டசபை சபாநாயகர் மற்றும் பன்ஸ்வாடா தொகுதி எம்.எல்.ஏ. ஶ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தனர். இதுவரை பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்