< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா: பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தேசிய செய்திகள்

தெலுங்கானா: பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினத்தந்தி
|
15 March 2024 5:36 PM IST

கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கவிதாவிடம் ஏற்கனவே சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்