< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் பட்டம் விடும்போது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
|15 Jan 2024 3:01 AM IST
விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மெத்சல்-மல்கஜ்கிரி,
தெலுங்கானாவில் பட்டம் விடும்போது மாடியில் இருந்து தவறி விழுந்த 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெத்சல்-மல்கஜ்கிரியில் பெட் பஷீராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆகாஷ் (20 வயது) என்ற இளைஞர் நேற்று தனது வீட்டின் மாடியில் இருந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.