< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெலுங்கானா: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,000 கிலோ கஞ்சா அழிப்பு
|14 Jun 2024 8:40 PM IST
தெலுங்கானாவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,000 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அதிகாரிகள் இன்று அழித்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாலாநகர், மாதாபூர், மேத்சல், ராஜேந்திரநகர், சம்ஷாபாத் ஆகிய 5 மண்டலங்கள் மற்றும் 30 காவல் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 122 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்பட்டன.
இதன்படி சுமார் 5 ஆயிரம் கிலோ போதைப்பொருட்களை டி.சி.பி. கே.நரசிம்மா தலைமையில், சைபராபாத் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இன்று ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள எடுலாபள்ளி கிராமத்தில் அமைந்திருக்கும் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நிலையத்தில் வைத்து அழித்தனர்.