< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
|11 Sept 2023 12:15 AM IST
உன்சூர் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பறிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மைசூரு
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிதரள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தரணி மண்டியில் புதிதாக விடுதி கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது21) என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரகாஷ் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் மின்வயரை காலால் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.
அவரை அருகில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சரகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.