< Back
தேசிய செய்திகள்
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

தினத்தந்தி
|
11 Dec 2022 12:15 AM IST

சிவமொக்காவில் சொத்து தகராறில் விபரீதம் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவமொக்கா:-

உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி தாலுகா தட்டேகட்டே கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபாத ஹெக்டே (வயது 52). இவர் தனது குடும்பத்தினரிடம் சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கோபப்பட்ட அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா வரதாஹள்ளி பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்தார். அப்போது சகோதரியுடன் பேசிய அவர் பின்னர் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிைலயில் நேற்று முன்தினம் வராதஹள்ளி கிராமத்தையொட்டிய காட்டு பகுதியில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற சாகர் புறநகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவரது சட்டை பையில் ஆதார் கார்டு இருந்தது. அதைவைத்து விசாரித்த போது, தூக்கில் பிணமாக தொங்கியது, ஸ்ரீபாத ஹெக்டே என்பதும், அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீபாத ஹெக்டேவின் சகோதரி, போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது சகோதரர் தற்கொலைக்கு விநாயகா, கேசவா, ஜெகதீஷ் ஆகியோர்தான் காரணம் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்