< Back
தேசிய செய்திகள்
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தேசிய செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
20 Jan 2023 2:25 AM IST

கோலாரில் குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோலார் தங்கவயல்,

குடும்ப தகராறு

கோலார் தாலுகா தின்னேஒசஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 35). பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்த சவுந்தர்யா என்பவரை மஞ்சுநாத் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டை போட்டு கொண்டனர். இந்நிலையில் சவுந்தர்யா கர்ப்பமானார். இதற்கிடையில் அந்த கருவை மஞ்சுநாத் கலைக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கணவனுடன் கோபப்பட்ட சவுந்தர்யா தாய் வீட்டிற்கு ெசன்றுவிட்டார். மகள் வீட்டிற்கு வந்ததை பார்த்த சவுந்தர்யாவின் பெற்றோர், மஞ்சுநாத்திடம் நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுநாத் மனம் உடைந்து காணப்பட்டார்.

வாலிபர் தற்கொலை

இந்நிலையில் நேற்று கோலார் தாலுகா கேலனூரு கேட் அருகே பிணமாக கிடந்தார். இது குறித்து கோலார் புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மஞ்சுநாத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் மஞ்சுநாத்தின் பெற்றோர் மகன் சாவுக்கு சவுந்தர்யா மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்று கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கோலார் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்