< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது
|17 Aug 2024 7:14 AM IST
வாலிபர் ஒருவர், பெண் குளிப்பதை ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் பன்வெல் தாலுகாவில் உள்ள மோர்பேயில் வசிக்கும் பெண் ஒருவர், தனது வீட்டின் இரண்டாவது மாடியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த குழாய் வழியாக ஏறிய வாலிபர் ஒருவர், பெண் குளிப்பதை ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை அறிந்த அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் அதே பகுதியை சேர்ந்த பிரசாத் ரத்னராஜ் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.