< Back
தேசிய செய்திகள்
காதலனை நம்பி சென்ற சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்
தேசிய செய்திகள்

காதலனை நம்பி சென்ற சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்

தினத்தந்தி
|
18 July 2024 4:57 PM IST

பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த வாலிபர், சிறுமியை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வருமாறு கூறியுள்ளார். காதலன் அழைத்தபடி சிறுமியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே மறைந்து இருந்த மேலும் 6 பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை கைதுசெய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்