மும்பையில் நடுரோட்டில் மாணவரை குத்திக் கொன்ற காதலியின் முன்னாள் காதலன்
|மும்பையில் காதலியின் முன்னாள் காதலன், மாணவரை நடுரோட்டில் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மும்பையில் காதலியின் முன்னாள் காதலன், மாணவரை நடுரோட்டில் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முக்தார் ஷேக் (வயது 19). கல்லூரி மாணவரான இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் சுனாபட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நடுரோட்டில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் முக்தாரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த முக்தாரை அருகிலிருந்த மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முக்தாரின் காதலி, இதற்கு முன்பு வேறொரு நபரை காதலித்து வந்துள்ளார். பின்னர், அவரை விட்டு பிரிந்து முக்தாரை காதலித்துள்ளார். இதன் காரணமாக முக்தாரின் காதலியின் முன்னாள் காதலன் ஒரு நண்பனுடன் சேர்ந்து முக்தாரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 302 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.