மாவட்ட செய்திகள்
துப்பாக்கி முனையில் இளம்பெண் கற்பழிப்பு- தொழில்அதிபர் கைது
|பெங்களூருவில் துப்பாக்கி முனையில் இளம் பெண்ணை கற்பழித்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனில் ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான தனியார் தங்கும் விடுதி உள்ளது. அந்த தங்கும் விடுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது தங்கும் விடுதிக்கு சென்ற அனில் ரவிசங்கர், அங்கு வசித்து வரும் இளம்பெண்ணின் அறைக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி இளம்பெண்ணை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இளம்பெண்ணை அனில் ரவிசங்கர் கற்பழித்ததாகவும், இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும், அவ்வாறு கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட இளமபெண், அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டாா். மேலும் இளம்பெண்ணை கற்பழித்ததாக அனில் ரவிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து உரிமத்துடன் கூடிய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த அனில் ரவிசங்கர், பெங்களூருவில் டைல்ஸ் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.