< Back
தேசிய செய்திகள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை-கோலிக்கோடு ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதம்..!
தேசிய செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை-கோலிக்கோடு ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதம்..!

தினத்தந்தி
|
20 Nov 2022 2:28 PM IST

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை-கோலிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோலிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று மூன்று மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 6.13 மணிக்கு மும்பை-கோலிக்கோடு செக்டரில் 114 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 581, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6.25 மணிக்கு மீண்டும் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து என்ஜினீயர்கள் விமானத்தை முழுமையாக சோதனை செய்தபிறகு மீண்டும் காலை 9.50 மணிக்கு விமானம் கோலிக்கோடு நோக்கி புறப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்