< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆசிரியர் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
|5 Sept 2023 9:54 AM IST
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- எதிர்காலத்தை உருவாக்குவதில் கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்துக்காக வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.