< Back
தேசிய செய்திகள்
உப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்; ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் ஹொரட்டி பங்கேற்பு
தேசிய செய்திகள்

உப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்; ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் ஹொரட்டி பங்கேற்பு

தினத்தந்தி
|
5 Sept 2022 8:50 PM IST

உப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் ஹொரட்டி பங்கேற்றனர்.

உப்பள்ளி;


மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் மற்றும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

இதேபோல், தார்வார் மாவட்டம் உப்பள்ளி கப்பூரில் உள்ள அரசு பள்ளியில் உப்பள்ளி-தார்வார் மாவட்ட கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் ஹொரட்டி எம்.எல்.சி., பிரசாந்த் அப்பய்யா எம்.எல்.ஏ. மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் ஹொரட்டி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 8 முறை எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பசவராஜ் ஹொரட்டிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்