< Back
தேசிய செய்திகள்
சக ஊழியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற பள்ளி ஆசிரியர்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சக ஊழியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற பள்ளி ஆசிரியர்

தினத்தந்தி
|
30 Jan 2024 4:35 PM IST

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், தனது சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஞ்சியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள பொரையாகட் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கோடா காவல் கண்காணிப்பாளர் நாது சிங் மீனா, "ஒரு பெண் உள்பட இரண்டு ஆசிரியர்களின் உடல்கள் பள்ளியில் உள்ள அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தன, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரும் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார்" என்று தெரிவித்தார்.

ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்