ஆபாச படம் காட்டி 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
|செல்போனில் ஆபாச படத்தை காட்டி ஆசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
சிம்லா,
இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி சிறப்பு வகுப்புகள் முடித்துவிட்டு அந்த மாணவி அழுதவாறே வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் விசாரித்துள்ளார்.
அப்போது மாணவி படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஓவிய ஆசிரியர் செல்போனில் ஆபாச படத்தை காட்டி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆசிரியர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.