4 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது
|மும்பையில் 4 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த உடற்கல்வி ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையில் விக்ரோலியின் கிழக்குப் புறநகரில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர், தாகூர் நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் கோபமடைந்த பெற்றோர், உடற்கல்வி ஆசிரியரை பள்ளிக்கு வெளியே அடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்த வேறு சில பெண்களையும் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் இதற்கு முன்பு தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்தார். இதேபோன்ற சம்பவத்தின் காரணமாக அவர் அங்கிருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.