< Back
தேசிய செய்திகள்
பாலக்காடு: 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியருக்கு 26 ஆண்டு சிறை
தேசிய செய்திகள்

பாலக்காடு: 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியருக்கு 26 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
31 Aug 2022 8:40 PM IST

பாலக்காடு அருகே 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத பாடசாலை ஆசிரியருக்கு 26 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாலக்காடு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவனந்தபுரம்:

பாலக்காடு அருகே மண்ணார் காட்டில் 4-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மத பாடசாலை ஆசிரியருக்கு 26 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 1.75 லட்சம் அபராதம் விதித்து பாலக்காடு விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

வழக்கு குறித்து விபரம் வருமாறு:- பாலக்காடு, மண்ணார் காட்டை சேர்ந்தவர் நவுஷாத் லத்தீப் (43) இவர் மத பாடசாலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2018 ஜூலை முதல் 2019 மார்ச் வரை பள்ளியில் படித்த 4-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக நவுஷாத் லத்தீப் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர் மீதான இந்த வழக்கு விசாரணை பாலக்காடு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட நவுஷாத் லத்தீபுக்கு 26 ஆண்டு கடும் காவல் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம் ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்