< Back
தேசிய செய்திகள்
மாணவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம் குறித்து கற்பியுங்கள் - கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம் குறித்து கற்பியுங்கள் - கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை

தினத்தந்தி
|
8 Nov 2022 5:34 PM IST

9-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கற்பிக்கவேண்டுமென கர்நாடக ஐகோர்ட்டு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூரு,

சமீப காலமாக கர்நாடகாவில் இளம் பருவ காதல் விவகாரங்கள் தலைதூக்கி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் போக்சோ வழக்கு ஒன்று பதிவானது. அதில் பாதிக்கப்பட்ட சிறுமியும், பாலியல் ரீதியாக ஈடுபட்ட சிறுவனும் பதினெட்டு வயதிற்கு உட்பட்டு இருந்தனர்.

இந்த வழக்கு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 15 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு போக்சோ சட்டங்கள் அடிப்படையில் மாறுதல்களை கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறும்போது, சமீப காலமாக சிறார் தொடர்பான பாலியல் ரீதியிலான குற்றங்கள் காதலில் தொடங்கி பாலியல் வன்கொடுமையாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகிறது.

எனவே இந்த வகை சிறார்கள் இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து அறிந்துகொள்ள ஏதுவாக, பள்ளிகளில் ஒன்பதாவது வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கற்பியுங்கள்.

மேலும், பாலியல் குற்றம் மற்றும் அதனால் வழங்கப்படும் தண்டனைகளும், இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாக பாடம் கற்பியுங்கள் என்று கர்நாடக மாநில தலைமை செயலருக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அறிக்கையும் விரைவில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு மாநில அரசை கேட்டுக்கொள்டுள்ளது.

மேலும் செய்திகள்