< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தான்சானியா அதிபர் இந்தியா வருகை - ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சந்திப்பு
|9 Oct 2023 10:37 AM IST
4 நாள் பயணமாக தான்சானியா அதிபர் இந்தியா வருகை தந்துள்ளார்.
டெல்லி,
தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று மாலை டெல்லி வந்த சமியாவை மத்திய மந்திரி அன்னபூர்ன தேவி வரவேற்றார்.
இந்நிலையில், தான்சானியா அதிபர் சமியா இன்று காலை ஜனாதிபதி மாளிகை வந்தார். அவருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தான்சானியா அதிபர் சமியாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து இந்தியா - தான்சானியா இடையேயான உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிபர் சமியா, பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளனர். இதையடுத்து, தான்சானியா அதிபர் சமியாவுக்கு இன்று மாலை ஜனாதிபதி முர்மு விருந்து அளிக்க உள்ளார்.