< Back
தேசிய செய்திகள்
தமிழக மருத்துவ மாணவர் ஜார்க்கண்டில் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

தமிழக மருத்துவ மாணவர் ஜார்க்கண்டில் உயிரிழப்பு

தினத்தந்தி
|
2 Nov 2023 3:44 PM IST

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சி,

தமிழகத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற மாணவர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் மாணவர் மதன்குமார் உடல், கல்லூரி விடுதி அருகே உள்ள முட்புதரில் கிடந்தது.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதன்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து அவரது அறைக்குச் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் ஆயில் கீழே சிதறி கிடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மதன்குமாரின் செல்போன், லேப்டாப் ஆகியவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர்தான் மதன் குமார் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள முடியும் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்