< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் அண்ணாமலை பங்கேற்ற தேர்தல் பிரச்சார மேடையில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் அண்ணாமலை பங்கேற்ற தேர்தல் பிரச்சார மேடையில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்

தினத்தந்தி
|
27 April 2023 8:12 PM IST

வேறு மொழி பாடல் பாடப்படுவதை அறிந்து முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக பாடலை நிறுத்தும்படி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவமோகா நகரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதால், இந்நிகழ்வின் போது தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா வேறு மொழி பாடல் பாடப்படுவதை அறிந்து உடனடியாக பாடலை நிறுத்தும்படி கூறினார். பின்னர் ஒலிபெருக்கியின் மூலம் பேசிய அவர், கன்னட நாட்டு கீதம் தெரிந்தவர்கள் இருந்தால் மேடையில் வந்து பாடும்படி கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்