< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மதுரை ரெயில் தீ விபத்து: ரெயில்வே அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
|27 Aug 2023 4:24 AM IST
மதுரையில் ரெயில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார்.
கொல்கத்தா,
மதுரை ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் பலியாகினர்.
இதுகுறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று 'எக்சில்' வெளியிட்ட பதிவில், 'மதுரையில் ரெயில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இதற்கு காரணம் யார் என்று விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் கவனமாக இருக்கவும், பாதுகாப்பு, மனித உயிர்கள் குறித்த அலட்சியத்தை தவிர்க்கவும் ரெயில்வே அதிகாரிகளை வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.