< Back
தேசிய செய்திகள்
ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: நிர்மலா சீதாராமன் தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: நிர்மலா சீதாராமன் தகவல்

தினத்தந்தி
|
30 Jun 2022 4:37 AM IST

ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சண்டிகார்,

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் சண்டிகாரில் 2 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி மந்திரி, அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தமிழகத்தின் மதுரையில் நடைபெறுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் நடைபெறும். தமிழ்நாடு நிதி மந்திரி பழனிவேல் தியாகராஜன் அழைப்பின் பேரில், இந்த கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது' என தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் விளையாட்டு மற்றும் குதிரைப் பந்தயம் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் செய்திகள்