< Back
தேசிய செய்திகள்
மேகதாது திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் - மத்திய மந்திரி குமாரசாமி
தேசிய செய்திகள்

மேகதாது திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் - மத்திய மந்திரி குமாரசாமி

தினத்தந்தி
|
23 July 2024 6:55 AM IST

தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் எப்போதும் தொல்லை கொடுத்தது இல்லை என்று மத்திய மந்திரி குமாரசாமி கூறினார்.

புதுடெல்லி,

மத்திய கனரக தொழில்துறை மந்திரி குமாரசாமி டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு தினமும் 5, 6 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் செல்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை விட தமிழகத்திற்கு கூடுதல் நீர் சென்றுள்ளது. தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் எப்போதும் தொல்லை கொடுத்தது இல்லை. உபரி நீரை பயன்படுத்தும் விஷயத்தில் கர்நாடகத்தின் மேகதாது திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கர்நாடக காங்கிரஸ் அரசு சில்லரை அரசியல் செய்து கொண்டிருக்கிறது. காங்கிரசார், மத்திய மந்திரிகளை குறைத்து பேசுகிறார்கள்.நான் என்பது அகங்காரம். நாம் என்பது நமது பண்பாடு. இந்த எளிமையான தத்துவம் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்