< Back
தேசிய செய்திகள்
டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
27 Sept 2022 12:45 AM IST

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி சென்றார்.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 30-ந்தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்