< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய மந்திரிக்கு ராகுல்காந்தி கடிதம்
|28 Sept 2024 6:33 PM IST
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியும் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சுதா எழுதிய கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசிடம் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.