< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி... பிரதமர் மோடி பேச்சு
|25 May 2023 7:13 AM IST
மூன்று நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.
புதுடெல்லி,
ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.
இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில்
தமிழ் மொழி நம்முடைய மொழி என்று பிரதமர் மோடி பேசினார்.
மேலும், உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ் மொழிதான் என்றும், தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியருடைய மொழி எனவும் கூறினார். பப்புவா நியூ கினியா நாட்டில், அந்நாட்டு மொழியில் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன் எனவும் பிரதமர் மோடி கூறினார்.