< Back
தேசிய செய்திகள்
தாலுகா அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

தாலுகா அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Nov 2022 4:44 AM IST

கலபுரகியில் தாலுகா அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கலபுரகி:

கலபுரகி தாலுகாவை சேர்ந்தவர் சரண்பசப்பா பட்டீல் (வயது 32). இவர் தாலுகா அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறையில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது உயர் அதிகாரிகளில் தொல்லை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்