< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள் - பாஜக தலைவர் அமித்ஷா
|21 Feb 2023 5:16 PM IST
தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள் என்று அமித்ஷா கூறினார்.
டெல்லி,
சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தாய்மொழி தினத்திற்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த நாளில் நமது தாய் மொழியுடன் இணைவோம் மற்றும் தாய்மொழியை மேலும் வளர்ப்போம் என உறுதிமொழி எடுங்கள். நமது தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். குழந்தைகள் தாய்மொழியில் எழுதி, பேசி, யோசிக்கும்போது அவர்களின் யோசனை திறன், ஆராய்வு, பகுப்பாய்வு திறன் அதிகரிக்கும்' என்றார்.