< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாக்பூர் விமான நிலையத்தில் தரையில் மோதிய இண்டிகோ விமான வால்பகுதி
|18 April 2023 10:16 AM IST
நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இண்டிகோ விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து நாக்பூர் நோக்கி 6இ-203 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் ஒன்று வந்தது. அது, நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என இண்டிகோ விமானத்தின் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, அந்த விமானம் ஆய்வு மற்றும் பழுது நீக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. விமானம் புறப்படும்போதோ அல்லது தரையிறங்கும்போதோ விமானத்தின் வால்பகுதி தரையில் தட்டும்போது இந்த சம்பவங்கள் நடக்கின்றன.