< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
|2 Oct 2022 12:15 AM IST
மங்களூருவில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு:
மங்களூரு நகர் காவூரை சேர்ந்த ஒருவர், நிலம் விற்பனை தொடர்பாக தடையில்லா சான்றிதழ் கேட்டு மங்களூரு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில், தடையில்லா சான்றிதழ் கொடுக்க ரூ.4,700 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தாசில்தார் உதவியாளர் சிவானந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த நபர், லோக் அயுக்தா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசாரின் அறிவுரையின்பேரில் அந்த நபர் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சிவானந்தாவிடம் கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கிய சிவானந்தாவை லோக் அயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த லஞ்ச வழக்கில் தாசில்தார் புரந்தருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து லோக் அயுக்தா போலீசார், தாசில்தார் புரந்தரையும் கைது செய்தனர்.