< Back
தேசிய செய்திகள்
பாரத் மண்டபத்தில் மரக்கன்று நட்ட ஜி-20 தலைவர்கள்
தேசிய செய்திகள்

பாரத் மண்டபத்தில் மரக்கன்று நட்ட ஜி-20 தலைவர்கள்

தினத்தந்தி
|
11 Sept 2023 2:06 AM IST

பாரத் மண்டபத்தில் ஜி-20 தலைவர்கள் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

புதுடெல்லி,

ஜி-20 மாநாடு நடந்த டெல்லி பாரத் மண்டப வளாகத்தில், ஜி-20 தலைவர்கள் ஒரு அடையாளத்துக்காக மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

பிரதமர் மோடி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, நேற்றைய மாநாட்டில் 'ஒரே எதிர்காலம்' என்ற தலைப்பில் நடந்த 3-வது அமர்வின்போது, பிரதமர் மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் தங்கள் நாட்டு மரக்கன்றுகளை அளித்தனர்.

மேலும் செய்திகள்