22 வயது விமான பணிப்பெண்ணிடம் போதையில் 62 வயது நபர் சில்மிஷம்
|மும்பை வந்த விமானத்தில் பெண் ஊழியரை மானபங்கப்படுத்திய சுவீடன் நாட்டவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மும்பை
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் நேற்று
முன்தினம் (மார்ச் 30)வந்தது. இந்த விமானத்தில் பயணித்த சுவீடன் நாட்டை சேர்ந்த கி ளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனஸ்ம் (62) என்பவர் மது போதையில் இருந்துள்ளார். உணவு பரிமாற வந்த 22 வயதான பணிப்பெண்ணை தகாத முறையில் தொட்டு உள்ளார்.
விமானம் தரையிறங்கும் வரை அவர் அப்படியே நடந்து கொண்டார். ஊழியர்கள் எவ்வளவு எச்சரித்தும் அவர் அடங்கவில்லை. அந்த பெண் ஊழியர் பைலட்டிடம் புகார் தெரிவித்து நோட்டீஸ் அளித்தார். விமானம் மும்பையில் தரையிறங்கியதும், சுவீடன் நாட்டவர் மும்பை போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் தேவையான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாக கூறி உள்ளது, ஆனால் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட எட்டாவது விமானப் பயணி கிளாஸ் எரிக் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.