< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐக்கிய அரபு அமீரக நபரை விடுவிக்க பினராயி விஜயன் உதவி: ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு
|9 Aug 2022 3:22 AM IST
தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
கோழிக்கோடு,
தங்க கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இதனிடையே தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பிடிபட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நபரை விடுவிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உதவியதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவரை விடுவிக்க முதல்வர் சதி செய்ததாகவும், அரசு தலையிட்டு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போனுடன் சிக்கிய இளைஞரை விடுவித்தது என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.