< Back
தேசிய செய்திகள்
கிராமப்புற துப்புரவு பணி: தெலுங்கானா முதலிடம்
தேசிய செய்திகள்

கிராமப்புற துப்புரவு பணி: தெலுங்கானா முதலிடம்

தினத்தந்தி
|
3 Oct 2022 12:44 AM IST

கிராமப்புறங்களில் துப்புரவு பணியை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் தெலுங்கானா முதலிடம் பிடித்துள்ளது.

புதுடெல்லி,

கிராமப்புறங்களில் துப்புரவு பணியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநிலங்களையும், மாவட்டங்களையும் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் தரவரிசைப்படுத்துகிறது. அந்த அடிப்படையில், 'ஸ்வாச் சுர்வேக் ஷன் கிராமின்' என்ற விருது வழங்கி வருகிறது.

30 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட பெரிய மாநிலங்களிடையே தெலுங்கானா முதலிடம் பெற்றுள்ளது. அரியானா 2-வது இடத்தையும், தமிழ்நாடு 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

30 லட்சம் மக்கள்தொகைக்கு குறைவான சிறிய மாநிலங்களிடையே அந்தமான் நிகோபார் முதலிடத்தையும், டாமன் டையு தத்ராநகர் ஹவேலி 2-வது இடத்தையும், சிக்கிம் 3-வது இடத்தையும் பிடித்தன.

மாவட்டங்களிடையே பிவானி (அரியானா), ஜக்தியால் (தெலுங்கானா), நிஜாமாபாத் (தெலுங்கானா) ஆகியவை முதல் 3 இடங்களை பெற்றன. அவற்றுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார்.

மேலும் செய்திகள்