< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமனம்
|21 April 2023 10:40 PM IST
கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள ஐகோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், ஏப்ரல் 24ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தியை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 24, 2023 முதல் கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி பதவியேற்பார் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ டுவீட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.