மனைவி மீது சந்தேகம்.. நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்த கணவன் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
|பிஜு-வை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகமடைந்த கணவன், அவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கழுத்தறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இடுக்கி அருகே சக்குபள்ளம் மணக்கால் பகுதியை சேர்ந்தவர் பிஜு. இவருக்கு அம்பிலி என்பவருடன் திருமணமான நிலையில், மனைவி தகாத உறவில் இருப்பதாக கூறி பிஜு அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், கணவர் மீது போலீசில் புகாரளித்த அம்பிலி, அவரை பிரிந்து தனியே வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கணவனும், மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், நிதிமன்ற வளாகத்தில் வைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை பிஜு கழுத்தறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனே, விரைந்த போலீசார் பிஜு-வை தடுத்து, அவரது மனைவியை காப்பாற்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, பிஜு-வை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.