< Back
தேசிய செய்திகள்
இளம்பெண் மர்ம சாவு
தேசிய செய்திகள்

இளம்பெண் மர்ம சாவு

தினத்தந்தி
|
2 Sept 2022 2:40 AM IST

பெங்களூருவில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுஜிநகரில் வசித்து வந்தவர் ஷில்பா (வயது 26). இந்த நிலையில் நேற்று மதியம் ஷில்பா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி அறிந்ததும் பேடராயனபுரா போலீசார் ஷில்பாவின் வீட்டிற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஷில்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனாலும் ஷில்பாவை மர்மநபர்கள் கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்