< Back
தேசிய செய்திகள்
சட்டவிரோதமாக வீட்டுமனைகளை வழங்கிய அதிகாரி பணி நீக்கம்
தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக வீட்டுமனைகளை வழங்கிய அதிகாரி பணி நீக்கம்

தினத்தந்தி
|
4 Feb 2023 4:40 PM GMT

சிக்கமகளூருவில், அரசிடம் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வீட்டுமனைகளை வழங்கிய அரசு அதிகாரியை பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு:

சிக்கமகளூருவில், அரசிடம் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வீட்டுமனைகளை வழங்கிய அரசு அதிகாரியை பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

வீட்டுமனைகள்

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா வித்யாரண்யபுராவை சேர்ந்தவர் கோபால். இவர் அந்த கிராமத்தின் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் அரசிடம் அனுமதி பெறாமலும், உரிய அங்கீகாரம் இன்றியும் அந்த கிராமத்தில் சட்டவிரோதமாக லே-அவுட் உருவாக்கி வீட்டுமனைகளை வழங்கியதாவும், அதன்மூலம் பல லட்சம் ரூபாயை அவர் கையாடல் செய்ததாகவும் புகார்கள் எழுந்தன.

அதுதொடர்பான புகார்கள் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபுவிற்கு சென்றன. அவர் இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பணி நீக்கம்

விசாரணையில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கோபால் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதனால் அவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுபற்றி அரசிடமும் அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அதையடுத்து கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கோபாலை பணி நீக்கம் செய்ய அரசு அறிவுறுத்தியது.

அதன்பேரில் அதிகாரி கோபாலை பணி நீக்கம் செய்து நேற்று மாவட்ட பஞ்சாயத்துமுதன்மை செயல் அதிகாரி பிரபு உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்